அதிரடியாக உயரும் சிஎன்ஜி கேஸ் விலை.. பெரும் வேதனையில் ஓட்டுநர்கள்!
Dinamaalai October 21, 2024 09:48 PM

வாகனங்களுக்கான சிஎன்ஜி கேஸ் விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அடிப்படையில், சிஎன்ஜி வாகனங்கள் ஒப்பீட்டளவில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் தற்போது காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கோவை, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிவாயு பெறும் வசதி உள்ளது. இந்நிலையில் வாகனங்களுக்கு சி.என்.ஜி. கேஸ்  விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உற்பத்தி குறைந்துள்ளதால், தட்டுப்பாடு காரணமாகவும் தற்போது விலை உயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ சி.என்.ஜி. 90க்கு விற்கப்படுகிறது.மேலும் விலை உயர்ந்தால், ஒரு கிலோ சிஎன்ஜி. ரூ.96க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அதிக சிஎன்ஜி கேஸ் டாக்சி மற்றும் வாகனங்களை பயன்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.