விஜயே கூப்பிடலனாலும் மாநாட்டுக்குப் போவேன்... விஷால் சொல்றதுல ஏதாவது உள்குத்து இருக்கா?
CineReporters Tamil October 21, 2024 10:48 PM

விஜய் தன் முதல் அரசியல் மாநாட்டை வரும் அக்டோபர் 27ம் தேதி நடத்த உள்ளார். அதற்கான அத்தனை ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. விஜயே களத்தில் இறங்கி மாநாடுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறார். இதுபற்றி நடிகர் விஷால் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

விஜய் மாநாட்டில் கூப்பிட்டால் கலந்து கொள்வேன். வாக்காளர் என்ற முறையில் அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வேன். என்றாலும் விஜய் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமலேயே செல்வேன். அவருடைய கருத்து என்ன, அவர் மக்களுக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கும் இடையே மோதல் என்றெல்லாம் செய்திகள் வந்தன. மீடியாக்களின் ஆலோசனையைக் கேட்ட விஜய் தனக்கு சரி என்று பட்டதை உடனுக்குடன் மாற்றிக் கொண்டு அதன்படி செய்து வருகிறார் என்றும் அதனால் புஸ்ஸி ஆனந்த் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் என்றும் தகவல்கள் வந்தன.

மாநாட்டுக்கு முன் விஜயின் கட்சிக் கொடி அறிமுக விழாவில் மனைவி, பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை. தாய் தந்தையரிடம் விஜய் ஆசி வாங்கவில்லை என சில சர்ச்சைகள் வெடித்தன. அதே நேரம் விஜய் மக்கள் மத்தியில் இன்னும் தன் அரசியல் கொள்கைக் குறித்து எதுவும் பேசவில்லை. கொடிக்கான விளக்கமும் கொடுக்கவில்லை. எல்லாம் மாநாட்டில் தான் என்று சொல்லி விட்டார்.


ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி இருக்கிறார். அரசியல்னா என்னன்னு மத்தக் கட்சியில இருக்குறவங்களுக்குப் புரிய வைக்கிற மாதிரி தன்னோட கட்சி செயல்படும்னு சொல்லி இருக்கிறார். இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. போகப்போகத் தான் தெரியும்.

விஜய் மாநாட்டில் யார் யாரெல்லாம் பேச வேண்டுமோ அவர்களிடம் எந்தக் கட்சியையும் தாக்கிப் பேசக்கூடாது என்றும் கட்டளை இட்டுள்ளாராம். இப்படி இருந்தால் அவரது கட்சிக்கு எப்படி அங்கீகாரம் கிடைக்கும்? இடிக்க வேண்டிய நேரத்தில் இடித்தும் கூற வேண்டும் அல்லவா என்றும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் கேரக்டரைப் பொருத்தவரை அவர் மென்மையானவர். 10 வார்த்தைகளைத் தொடர்ந்து பேசுவதற்கே தயங்குவார். அரசியலுக்கு லாய்க்கில்லை என்று வலைப்பேச்சு பிஸ்மியும் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் பல்வேறு சவால்கள் விஜயின் மாநாட்டிற்கு இருக்கத்தான் செய்கிறது.

விஷாலைப் பொருத்தவரை அவரும் அரசியலில் குதிக்க உள்ளதாகப் பரவலாக பேச்சு அடிபட்டது. சேலத்தில் கூட ஒரு முறை கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று பேட்டி கொடுத்துள்ளார். ஒருவேளை விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என்பதைக் கண்டுவிட்டு அரசியலில் இறங்கலாம் என்று முடிவு செய்துள்ளாரோ என்னவோ?�

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.