Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
ஜான்சி ராணி October 22, 2024 09:14 PM

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் வருகிற நாளை (அக்டோபர், 22-ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23ஆம் தேதி காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24 காலையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையில் இருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையக்கூடும். தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகரும் இந்த புயல் 24ஆம் தேதி இரவு மற்றும் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலையில் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பல இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டானா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக East Coast Railways அறிவித்துள்ளதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

அக்டோபர், 23 மற்றும் 24 ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு:

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.