நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! சரிந்த தங்கம் விலை..!!
Newstm Tamil October 24, 2024 05:48 PM

தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் அக்டோபர் 18ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது.

* அக்.,19ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,20ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

* அக்.,21ம் தேதி திங்கள் கிழமை, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்.,22ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

* நேற்று (அக்.,23) சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று(அக்.,24) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.58,280க்கு விற்பீனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,285க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.