மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்!...லெபனானில் 19 பேர் பலி!
Seithipunal Tamil October 28, 2024 09:48 PM

லெபனான் மீதான இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலுக்கு, நேற்று  ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட ஒட்டு மொத்தமாக  2 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.