சென்னை செங்குன்றம் அருகே பாஜக மாநில நிர்வாகி கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆவடி மாநகர காவல் துறையின் மத்திய குற்ற பிரிவு போலீசார் பாஜக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 2023 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையின் ஒரு பகுதியாக பாஜக நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர். பல்வேறு ஆவணங்களை அப்போது மத்திய குற்ற பிரிவு போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்தாண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி வீட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் பணப்பட்டுவாடா ஏதேனும் நடைபெறுகிறதா என்பதற்காக சோதனை நடைபெற்றது குறிப்பித்தக்கது.