வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக இருக்குமென மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன், “கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக இருக்கும். வெப்ப உயர்வால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் ‘மரைன் ஹீட் வேவ்’ மாதக்கணக்கில் தொடர்கிறது. மரைன் ஹீட் வேவ் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும். குறைந்த பரப்பளவில் அதிக நீர் கொண்ட மேகங்கள் உருவாகின்றன. மேகங்களின் நீர் சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது” என்றார்.
இதனிடையே அடுத்த 36 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.