உச்சகட்ட கொடூரம்…! பக்கத்து வீட்டுக்காரனை பழிவாங்க பெற்ற மகளையே கொன்ற தந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!
SeithiSolai Tamil November 15, 2024 12:48 AM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நுரங்கியா பகுதியில் ஜெய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் கடைசி மகள் 16 வயதுடைய சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

அதாவது ஜெய் நாராயணனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவரை சிக்க வைப்பதற்காக ஜெய் நாராயணன் தனது மகளையே கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.