DMK Members Joined TVK: வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது, என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன் என பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், திமுகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தவெகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக வேலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் வேல்முருகன் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
திராவிட முன்னேற்றக் கழகம் ராஜா குப்பம் ஊராட்சியில் நிலவும் கட்சி அதிருப்தி காரணமாக திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் , இன்று நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கட்சி துரோகிகளை மன்னிக்க மாட்டேன் என பேசியுள்ளது, தவெகவில் சிலர் இணைந்ததை குறிப்பிட்டுதான் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.