3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!
SeithiSolai Tamil November 16, 2024 05:48 PM

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார்.

இதனிடையே DHFL நிறுவனத்தை PCHFL (PIRAMAL CAPITAL AND HOUSING FINANCE LIMITED) நிதி நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. சோமசுந்தரமும் 2024 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியால் ஜனவரி, மே மற்றும் நவம்பர் என மூன்று மாத தவணையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் அங்கிருந்த பெண்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி பேசியதோடு வீட்டின் வெளிச்சுவற்றில் PCHFL கடனில் உள்ளது என்று பெயிண்டால் எழுதியுள்ளனர். இது குறித்து சோமசுந்தரம் புகார் அளித்த நிலையில் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் விசாரித்த போது இது தொடர்பாக நிர்வாகம் விளக்கம் அளிக்கும் என கூறியுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.