இந்தியா தென் ஆப்பிரிக்கா நான்காவது டி20 ஆட்டம் – ஜோகன்னஸ்பர்க்– 15.11.2024
இந்திய அணி தொடரை வென்றதுமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (20ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 283, திலக் வர்மா 120, சஞ்சு சாம்சன் 109, அபிஷேக்ஷர்மா 36) தென் ஆப்பிரிக்க அணியை (18.2 ஓவர்களில் 148, ஸ்டப்ஸ் 43, டேவிட் மில்லர்36, மார்கொ ஜான்சன் 25, அர்ஷ்தீப் சிங் 3/20, வருண் 2/42, அக்சர் படேல் 2/6, ரவி பிஷ்னோய்1/28,) 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்குடி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவதற்காகச் சென்றிருக்கிறது. அதில் முதலாவது ஆட்டம் டர்பன்நகரில் நடந்தது. அதில் இந்திய அணி 61 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம்கபரைகா நகரில் நடந்தது. அதில் தெ ஆப்பிரிக்க அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவதுஆட்டம் செஞ்சுரியன் மதானத்தில் நடந்தது. இதில் திலக் வர்மா அடித்த சதம் காரணமாய்இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, இன்று இறுதி ஆட்டம் இன்று ஜோகன்னஸ்பர்க்கில்நடந்தது. பூவாதலையா வென்ற இந்திய அணி மட்டையாட முடிவுசெய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சுசாம்சன் (56 பந்துகளில் 6 ஃபோர், 9 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன் ரன்),அபிஷேக் ஷர்மா (18 பந்துகளில் 2 ஃபோர், 4 சிக்சர்களுடன் 36 ரன்) அருமையான தொடக்கம்தந்தனர். பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு73 ரன்கள் எடுத்தது. அபிஷேக் ஷர்மா 5.5ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்திலும்திலக் வர்மா மூன்றாவது இடத்தில் இறங்கினார். இந்திய அணி 100 ரன்களை 51 பந்துகளிலும்150 ரன்களை 70 பந்துகளிலும் 200 ரன்களை 85 பந்துகளிலும் எடுத்தது. 20 ஓவர் முடிவில்ஒரு விக்கட் இழப்பிற்கு 283 ரன் எடுத்தது.
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ரெகுலர் கிரிக்கட்விளையாடும் அணியின் இரண்டு வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறை. திலக் வர்மா அடுத்தடுத்தஆட்டங்களில் சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முதல் வீரர் சஞ்சு சாம்சன். தென் ஆப்பிரிக்கஅணியின் சுழல் பந்து வீச்சாளர்களார் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரண்டாவதாக விளையாட வந்த தென் ஆப்பிரிக்கஅணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்றிக்ஸ் முதல் ஓவரில் ஆட்ட்மிழக்க,ரிக்கிள்டன் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மர்க்ரம் மூன்றாவதுஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் விக்கட்டுகளையும் எடுத்தர்.இதனால் 18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 148 ரன்மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
பல சாதனைகளை முறியடித்த இன்றைய அற்புதமான இந்தியன் இன்னிங்ஸ்…
★1 டி20i வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் முதல் முறையாக இரண்டு வீரர்கள் செஞ்சுரி அடித்து அட்டகாசமான புதிய சாதனை.
★2 ஒரு வருடத்தில் மூன்று முறை T20 செஞ்சுரிகள் அடித்து புதிய சாதனை படைத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆனார் சஞ்சு சாம்சன். #SanjuSamson
★3 அடுத்தடுத்த போட்டிகளில் செஞ்சுரி அடித்து இரண்டிலும் நாட் அவுட் ஆக புதிய சாதனை படைத்தார் திலக் வர்மா. #TilakVarma
★4 வெளிநாட்டில் இந்தியா அமர்க்களமாக அடித்த அதிகபட்ச ரன்கள் (283) புதிய சாதனை.
★5 சவுத் ஆப்ரிக்கா வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பதிவான அசத்தலான அதிகபட்ச ரன்கள் (283) புதிய சாதனை,
★6. T20i வரலாற்றில் மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் (210) ரன்கள் 2வது விக்கெட்டுக்கு அனாயாசமாக ஒரு புதிய சாதனை.
★7. ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (23) அடித்த அணி இந்தியா மற்றொரு அதிரடியான புதிய சாதனை.
News First Appeared in