கனடாவில் 5 மில்லியன் வெளிநாட்டினர் தற்காலிகமாக வாழ்கின்றனர். இதில், பல லட்சம் மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களின் பணி மற்றும் படிப்பு விசாக்கள் அடுத்த ஆண்டு காலாவதியாக உள்ளது. இவர்களின் விசாக்களை புதுப்பிக்க அனுமதி வழங்கப் போவதில்லை என்று கனடா அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பல இலட்சம் வெளிநாட்டு மாணவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப அந்நாடு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், நாட்டில் படிப்பது மட்டுமின்றி, வேலையும் செய்து வருகின்றனர். இவர்களது விசாக்கள் ஒரே நேரத்தில் முடிவடைவதால் சுமார் 7 லட்சம் இந்திய மாணவர்கள் கனடாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனடா ஆளும் அரசிடம் எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டுள்ளன. இது தொடர்பாக அரசு அதிகாரி மில்லர் விளக்கம் அளித்துள்ளார். அதில், விசா காலாவதியானவர்களுக்கு புதிய அனுமதி வழங்குவது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றார். மே 2023 நிலவரப்படி, கனடாவில் சுமார் 1 மில்லியன் மாணவர்கள் படிக்கின்றனர். அந்நாட்டு அரசு நடத்திய ஆய்வில் 3.96 லட்சம் பேர் பணிக்கு பிந்தைய விசாவில் படிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.