இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களும், அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வினின் ரசிகர்கள் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஓய்வு அறிவித்த பின் அஸ்வின் வீடு திரும்பி உள்ளார். சென்னையில் உள்ள மேற்கு மாம்பழத்தில் அவரது வீட்டிற்கு வந்த அஸ்வினை மலர்த்துவி, மாலை அணிவித்து, மேலதாளத்தோடு உறவினர்களும், ரசிகர்களும் விமர்சையாக வரவேற்றனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.