இந்த கூட்டத்தில் பேக் செய்யப்படாத உப்பு மற்றும் மசாலா உடன் கூடிய பாப்கார்னுக்கு 5 சதவீதம், முன்பே பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீதம், காரமல் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரி விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜிஎஸ்டியை 18 ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும்
50 சதவீதத்திற்கும் மேல் சாம்பல் உள்ள ஏசிசி பிளாக்குகளுக்கான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 12 சதவீதம் ஆக குறைக்கவும்
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய கார்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் , மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் காப்பீடுகளுக்கான ஜி.எஸ்.டி., குறித்து முடிவு எடுப்பது தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் ஆலோசனை நடத்த வேண்டும் என பல உறுப்பினர்கள் கூறினர். அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் நடக்கும். அப்போது, இது குறித்து அறிக்கை அளிக்கப்படும் என பீஹார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி கூறியுள்ளார்.