இனிமேல் சினிமாவுக்கு போன கூடுதல் செலவுதான்.... பாப்கார்ன், பழைய கார் ஆகியவற்றுக்கு 18% வரி .... ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முக்கிய முடிவு....
ET Tamil December 22, 2024 01:48 AM
ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது பாக்கெட் செய்யப்பட்ட ரெடி டூ ஈட் பாப்கார்ன், பழைய கார் விற்பனை, ஏசிசி பிளாக் என பல பொருட்களுக்கான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாற்றி அமைத்துள்ளது. ஆனால் பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. பாக்கெட் செய்யப்பட்ட ரெடி டூ ஈட் பாப்கார்ன்களுக்கான வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது உப்பு மற்றும் மசாலா கலந்த பாப் கார்ன், பேக்கிங் செய்யப்படாமல் மற்றும் லேபிளிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டால் ஜி எஸ் டி 5%யும், பேங்கிங் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கேரமல் பாப் கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய கார்களின் விற்பனை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கொரோனாவுக்கு பிறகு பழைய கார்களின் விற்பனை அதிகமாக உள்ளது. இந்த கார்களின் விற்பனைக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்ந்தப்பட்டுள்ளது. அதாவது பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனிநபர் ஒரு கார்களுக்கு பொருந்தது என கூறப்பட்டுள்ளது. ACC பிளாக் எனப்படும் ஆட்டோக்ளேவ் ஏரேட்டட் கான்கிரீட் கற்களுக்கான வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. ஏசிசி பிளாக்ஸில் 50% க்கும் அதிகமான ஃப்ளை ஆஷ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருந்தால், அந்த கற்கள் HS குறியீடு 6815 இன் கீழ் வரும். இதற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான கவுன்சில் கூட்டத்தில், வலுவூட்டப்பட்ட அரிசி கர்னல்களுக்கான வரி விகிதத்தை 18% இல் இருந்து 5% ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வரி விகிதம் இருக்க வேண்டுமென்று இந்தியாவில் 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விகிதத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டும் வருகிறது.