இளம் வயதிலிலேய உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் .பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டினார். செஸ் வடிவிலான கேக் வெட்டி அதனை அவருக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். குகேஷ் மென்மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது “குகேஷ் மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம். அவரை பாராட்டியன் மூலம் என்னை நான் பெருமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன்.