தமிழ் சினிமாவின் பழம்பெரும் முன்னணி நடிகர் சிவகுமாரின் மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி. இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள். சூர்யா, கார்த்தி இருவருமே பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பல நல்ல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பாடகர் கிரிஷ் நடிகர் சூர்யா குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் அவர் கூறியதாவது, சிங்கம் 3 படப்பிடிப்பு முடிந்த பின் நானும், சூர்யா அண்ணனும் ஒன்றாக காரில் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது ரோட்டில் ஒருவர் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர் சூர்யா அண்ணா சற்றும் யோசிக்காமல் அந்த நபரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றினார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, “அனைவரும் போல யோசித்து இருந்தால் என் தம்பி உயிரோடு இருந்திருக்க மாட்டான்”என பதில் அளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி கல்லூரியில் படிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்துள்ளார். அவரை யாரோ ஒருவர் சிவகுமாரின் மகன் என நினைத்து மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால்தான் நடிகர் கார்த்தி இன்று உயிருடன் உள்ளார் என நடிகர் சூர்யா பாடகர் கிருஷ்க்கு பதில் அளித்துள்ளார். என பாடகர் கிரிஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.