பொதுவாக ஜீரக ஜூஸ் உணவில் சேர்த்து கொண்டாலோ போதும் நம் உடலுக்கு ஏரளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் .இதனால்தான் கேரளா மக்கள் எப்போதுமே சீரக தண்ணீரையே அதிகம் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர் .மேலும் சீர் -அகம் என்றால் நம் அகத்திணை அதாவது உள்ளுறுப்புகளை சீராக்குவதில் அது முதன்மை வகிக்கிறது .அதனால் அதை சீரகம் என்று அழைக்கின்றனர் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பலர் இந்த காலத்தில் இரவில் நேரம் கடந்து உண்டு வருகின்றனர் .மேலும் , பசி எடுப்பதற்கு முன்பே அடுத்த வேளை உணவை உண்டு வருகின்றனர் .
2.இதனால் இந்த காலத்தில் பலருக்கும் வயிற்றில் உப்பசம், அஜீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு அவஸ்தை பட்டு வருகிறார்கள் .
3.இப்படியான சூழ்நிலைகளில் அரை டீஸ்பூன் ஜீரகத்தை சிறிது நீரில் போட்டு வேக வைத்து குடித்தால் அஜீரணம், வாயு தொந்தரவுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நம் ஆரோக்கியம் சிறப்பை பெரும்
4.சிலருக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்பட்டு மன வேதனை படுவர் ,
5.அவர்கள் ஜீரகத்தில் மனிதர்களின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்தும் சக்தி இருப்பதால் அதை உண்ணலாம் .
6.எனவே தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி, இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.
7.தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுத்து எப்போதும் நம்மை ஆரோக்கியமாய் வைத்திருக்கும்