சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு நாளை பாஜக மகளிரணி பேரணி நடத்த உள்ள நிலையில், ‘பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேரகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அந்த சார் யார்?” என்று அதிமுக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சியினர் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என்று குஷ்பு பேசியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், “தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்த பெண்ணை பாராட்டுகிறேன். எந்த மாநிலத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் பாதிப்புதான். பெண்களை பந்துபோல் பயன்படுத்தாதீர். பாலியல் வன்கொடுமையை அரசியலாக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.