அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , அண்ணா பல்கலைக்கழகம் கொடூரத்தின் உண்மையை மறைக்க முயலும் திமுகவை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும் பாஜக மகளிர் அணி சார்பில் குஷ்பு தலைமையில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி நடைபெற உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் போலீசார் நீதி பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.