தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வரும் நிலையில், படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் பாஜக கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ ரஜினிகாந்துடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்தது பற்றி பேசியுள்ளார். அதாவது தன்னையும் நடிகை மீனாவையும் முதலில் ரஜினிக்கு ஹீரோயின் என்று சொல்லி படத்தில் கமிட் செய்ததாக கூறியுள்ளார்.
அதை நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் டப்பிங் பேசும்போது படத்தை பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஹீரோயின்னு ன சொல்லி எங்களை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வச்சுட்டாங்க. கடைசி நேரத்தில் நடிகர் ரஜினிக்கு ஹீரோயின் கிடைத்ததால் எங்களை காமெடியாக்கிட்டாங்க. அந்த படம் வெளிவந்தபோது அண்ணாத்த படத்தில் குஷ்பூ மற்றும் மீனா கதாபாத்திரம் தேவை இல்லை என்று பலரும் கூறினார்கள். மேலும் இந்த விஷயம் மட்டும் முன்கூட்டியே தெரிந்திருந்தால் கண்டிப்பாக அண்ணாத்த படத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன் என்று கூறினார்.