பொதுவாக இந்த ப்ராய்லர் முட்டைகள் நாட்டு கோழி முட்டையை போல உடலுக்கு நன்மை செய்யாது .நாட்டு கோழி முட்டைகளை விளையாட்டு வீரர்கள் முதல் அதிக உடலுழைப்பு கொண்டவர்கள் தினம் சாப்பிடுவதால் அவர்கள் பலம் அதிகரிக்கிறது .இந்த நாட்டு முட்டையின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் அதில் ப்ரோட்டின் அதிகம் உள்ளதால் கண் ,எலும்பு போன்றவற்றின் ஆரோக்கியமும் மேம்படுகிறது
2.சிலர் பல வகையான நோய்கள், விபத்துகள் போன்றவற்றில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வில் இருப்பார்கள் .
3.அந்த நோயாளிகளுக்கு நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது.
4.மேலும் சூடான பசும்பாலில் நாட்டு கோழி முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கி அக்காலத்தில் நீண்ட நாட்களாக நோய் பாதிப்பில் இருந்தவர்கள் உடல் நலம் தேறவும், உடலில் பலம் ஏற்படவும் நோயாளிகளுக்கு மருத்துவ உணவாக தரப்பட்டது.
5.நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாமல் நம்மை பாதுகாக்கும் .
6.எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் நாட்டு முட்டையை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிட்டு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .