அதிமுகவை விமர்சித்த நடிகர் சூர்யா எங்கே போனாரு? செல்லூர் ராஜூ ஆவேசம்!
Dinamaalai December 30, 2024 08:48 PM

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி, திமுக அரசைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னால் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக  தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “பெண்கள் கல்வி கற்க எம்ஜிஆரும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தனர். பெண்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திமுக ஆட்சியில் மூடப்பட்டது. 

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக செயல்பட்டது. தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆகியுள்ளது. 

அதிமுக ஆட்சியில் 24,000 போராட்டங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கே போனார்கள்? அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே போனார்? எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.