கல்லூரி மாணவி சத்யபிரியா வழக்கில் சதீஷுக்கு மரணதண்டனை... நீதிமன்றம் அதிரடி!
Dinamaalai December 30, 2024 08:48 PM

கல்லூரி மாணவி சத்யபிரியா, சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு தள்ளி படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யபிரியா. கல்லூரி மாணவியான இவர், கடந்த 2022ம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞரால் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்துக்கொண்டிருந்த ரயிலில் தள்ளப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மாணவி சத்யபிரியா தன்னிடம் பேசாமல் விட்டதால் சதீஷ் ரயில் முன் தள்ளி கொன்றது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். அதே சமயம் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27ம் தேதி சதீஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, தண்டனை விவரங்களை இன்று டிசம்பர் 30ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தது.  இந்நிலையில் சதீஷுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.