திருநங்கைகளுக்கு இனி இருபெயர்களுடன் பிறப்பு சான்றிதழ்…. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!
SeithiSolai Tamil December 30, 2024 10:48 PM

கர்நாடகாவில் 34 வயதான திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து தனது புதிய பெயரில் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் கேட்டு மங்களூர் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த திருநங்கை கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு திருத்தப்பட்ட பாலினம் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அந்த சான்றிதழில் திருநங்கையின் முந்தைய பெயர் மற்றும் திருத்தப்பட்ட பெயர், பாலினம் போன்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்றும் கூறினார். அதேபோன்று இந்த சான்றிதழ்களை எல்லா திருநங்கைகளும் பெறும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.