புது வருஷத்திலும் தொடரும் சோகம்... 4வது முறையாக இன்றும் IRCTC தளம் முடங்கியது!
Dinamaalai January 01, 2025 04:48 PM

கடந்த 30 நாட்களுக்குள் ஐஆர்சிடிசி இணையதளம் 4வது முறையாக இன்று காலை செயலிழந்து முடங்கியது. இதன் காரணமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். 

நாடு முழுவதும் பலரும் ரயில் பயணங்கள் விரும்பும் நிலையில், தொடர்ச்சியாக அவ்வப்போது ஐஆர்சிடிசி இணையதளமும், செயலியும் முடங்குவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக செயலிழக்கும் இணையதளமும், ஐஆர்சிடிசி செயலியும் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து சரி செய்யப்படுவதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி 3 முறை ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த நிலையில், இன்று புது வருடத்தின் துவக்க நாளிலேயே செயலிழந்து பல் இளித்தது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு 
செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.