பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரும்பு, வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் பொங்கல் பரிசுடன் ரொக்கமாக பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்றார். அப்படி பார்த்தால் இன்றைய மதிப்பிற்கு ரூ.30000 வருகிறது. எனவே இந்த அரசு "பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும் என கூறினார்.