சமத்துவ தமிழகம் அமைப்போம்... தவெக தலைவர் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Dinamaalai January 01, 2025 10:48 PM

இன்று  ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உட்பட பல நாடுகளில் புத்தாண்டு பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.


இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம்.

உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.