விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தனது கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றது. இந்த ஆண்டு அவருக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கடந்த 2 வருடங்களாக நடிகர் அஜித் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகாமல் இருந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் ட்ரீட்டாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்து இரண்டு வருடங்களாக எடுத்து வந்த நிலையில் தற்போது தான் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்தில் கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பையும் ஒருசேர முடித்துவிட்டார். இரண்டு திரைப்படங்களின் பேட்ச் ஒர்க் மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இதில் விடாமுயற்சி திரைப்படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகிவிடும் என்கின்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்தது.
ஆனால் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்று லைக்கா நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதனை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.
ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் தற்போது வரை வெளியாகவில்லை. படத்தின் காப்பிரைட்ஸ் தொடர்பான பிரச்சனை இன்னும் தீர்வு வராமல் இருப்பதால் படத்தின் வெளியிட்ட தேதியை சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார்கள். படக்குழுவினர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வரும் என்கின்ற காரணத்தால் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த வீரதீரசூரன் திரைப்படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் தள்ளி வைத்திருந்தார்கள்.
ஆனால் கடைசி நேரத்தில் விடாமுயற்சி திரைப்படம் பின்வாங்கி விட்டதால் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரம் என்பதால் படத்தை அவசரப்பட்டு வெளியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்து ஜனவரி 30 ஆம் தேதிக்கு வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.
ஆனால் தற்போதும் விடாமுயற்சி திரைப்படம் பின்னாடியே துரத்திக் கொண்டு வருவது போல ஜனவரி 26 ஆம் தேதி அல்லது ஜனவரி 30 ஆம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. வீரதீரசூரன் படக்குழுவினர் ஏறத்தாழ ஜனவரி 30 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கும் நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தால் வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு தடை ஏற்படுமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.