Bigg Boss Tamil Season 8 : இதுனாலயே மஞ்சரி வெளிய போனது நல்லது தான்.. முத்துவையும் சேர்த்து தாக்கினாரா ஜெஃப்ரி?
Tamil Minutes January 10, 2025 12:48 PM

பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்பாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வந்த போது வீடே எமோஷனல் நிறைந்தபடி அமைந்திருந்தது. ஆனால் தற்போது இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வருகை தந்த பின்னர் ஏராளமான ரணகளங்கள் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் அரங்கேறி வருகிறது.

ஃபேட்மேன் ரவீந்தர் தலைமையில் சாச்சனா, சுனிதா, வர்ஷினி, ரியா என அனைவருமே ஜாக்குலின், சௌந்தர்யா என 95 நாட்கள் கடந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களை டார்கெட் செய்து தங்களது திட்டங்களை வகுத்து வருகின்றனர். இதுவரையிலும் சிறப்பாக முன்னேறிய போதும் இப்படி வெளியே இருந்து வந்தவர்கள் சொன்ன வார்த்தை நிச்சயம் அவர்கள் இரண்டு பேரையும் பெரிய அளவில் பாதித்தது என்றே தெரிகிறது.

மஞ்சரியின் கேம்

இது தொடர்பாக நிறைய பிரச்சனைகள் உருவாகி இருப்பதற்கு மத்தியில் தான் கடந்த வாரம் ஃபைனல் வரை முன்னேறுவார் என கருதப்பட்ட சிறந்த போட்டியாளர் மஞ்சரி பாதியிலேயே கண்ணீருடன் வெளியேறி இருந்தார். வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மஞ்சரி பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தாலும் அவர் ஆடிய ஆட்டம் பலருக்கும் சவாலாக தான் இருந்து வந்தது.

எங்கே தப்பு நடந்தாலும் அதை சரியாக தட்டி கேட்பதுடன் மட்டுமில்லாமல் யாராக இருந்தாலும் துணிச்சலாக எதிர்த்து நின்ற மஞ்சரியின் தைரியம் பார்வையாளர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்திருந்தது. அப்படி இருந்தும் வாக்கு உள்ளிட்ட விஷயங்களின் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து மஞ்சரி வெளியேறி இருந்தார்.

மஞ்சரி போனது சரி தான்

அப்படி ஒரு சூழலில் மஞ்சரி வெளியேறியதில் தவறு இல்லை என அதற்கு முன்பு வெளியேறிய ஜெஃப்ரி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “மஞ்சரி எலிமினேட் ஆனதில் என்ன தப்பு இருக்கிறது?. ஏன் அவர் ஆகக்கூடாதா. அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது சரி தான். பேச்சு விஷயத்தில் பலமாக இருந்தால் மஞ்சரி வெளியேற கூடாதா என்ன.

அவரது வேலையே பேசுவது தான். பிக் பாஸ் வீட்டிற்குள்ளும், வெளியேயும் பேசுவது தான் மஞ்சரி வேலை. ஆனால் என்னை எடுத்துக் கொண்டால் நான் உள்ளே செல்லும் போதே பேச தெரியாமல் போனேன். அதே நேரத்தில் தற்போது உள்ளே போய் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு வந்துள்ளேன். மஞ்சரியோ வெளியேயும் பேச தெரிந்து விட்டு பிக் பாஸ் வீட்டிற்கு சென்றும் எப்படி பேசுவதை மட்டுமே வைத்து சமாளிக்க முடியும்” என ஜெப்ரி குறிப்பிட்டுள்ளார்.

பலரும் மஞ்சரி ஃபைனல் வரை முன்னேறியிருக்கக் கூடிய போட்டியாளர் என குறிப்பிட்ட பிறகும் பேச்சால் மட்டுமே ஜெயிக்க முடியாது என அவரை விமர்சித்து பேசிய ஜெஃப்ரியின் கருத்தும் தற்போது அதிக வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.