நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது வீரலட்சுமி சீமான் மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். அதாவது நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிவரும் நிலையில் அவருக்கு ஆதரவாக வீரலட்சுமி. இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரு நடிகை என்னிடம் சீமானின் அந்தரங்க விஷயங்களை எல்லாம் கூறியுள்ளார்.
சீமான் பற்றி அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை நான் வெளியே சொன்னால் அவர் எவ்வளவு பெரிய காம கொடுரன் என்பது தெரியவரும். சீமான் பின்னால் நிற்கும் பெண்களே காரி துப்புவார்கள். அவர் ஒரு நடிகைக்கு போதைப்பொருட்களை கொடுத்து அவர் சுயநினைவில் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதையெல்லாம் வெளியிட்டால் பெண்களே அவரை அடித்து விரட்டுவார்கள். சீமானுக்கு பெண்கள் உரிமை குறித்து பேச தகுதி கிடையாது. மேலும் வதந்தி பரப்புவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.