மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ஜெரில் என்ற டோனி ஆஸ்கார் (56) வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அன்னி (45) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் டோனி ஆஸ்கார் பிரபல ஹோட்டல்களில் சமையல்காரர் ஆக பணிபுரிந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை. இவர்களுக்கு திருமணம் ஆக 26 வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தை இல்லை. இருப்பினும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்புடன் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் சம்பவ நாளில் தங்களுடைய 26வது திருமண நாளை சிறப்பான முறையில் கொண்டாடினார்.
தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் அழைத்து திருமண நாளை சிறப்பாக கொண்டாடி அவர்கள் மறுநாள் உறவினர்களுக்கு நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்ல இருக்கிறோம் என்று வீடியோ அனுப்பி உள்ளனர். இதனால் பதறிப் போன உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அன்னி படுக்கையறையில் மனக்குழத்தில் பிணமாக கிடந்த நிலையில் டோனி ஆஸ்கர் தூக்கில் பிணமாக தொங்கினார். அதாவது முதலில் அன்னி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய உடலை கீழே இறக்கி அவருடைய கணவர் திருமணத்தின் போது எடுத்த ஆடையை அணிந்து பூ போட்டு வைத்து அலங்கரித்து படுக்கையில் படுக்க வைத்துள்ளார்.
பின்னர் அவரும் தான் திருமணத்தின் போது அணிந்திருந்த உடையை அணிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோவில் எங்களுடைய மரணத்திற்கு நாங்கள் மட்டும்தான் காரணம். எங்கள் இருவரையும் ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள். எங்களுடைய சொத்துக்களை உறவினர்கள் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் உடல்நல பிரச்சனை யால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கமும் இவர்கள் தற்கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய மறுநாளே அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.