தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!
Dinamaalai January 10, 2025 03:48 PM


தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  அதன்படி சென்னையில்  
மாடம்பாக்கம் பிரதான சாலை, மாருதி நகர் முழுப் பகுதி, அண்ணா நகரின் ஒரு பகுதி, சுதர்சன் நகரின் ஒரு பகுதி, மாதா நகர், லக்ஷ்மி நகர், IAF மெயின் ரோடு, ரிக்கி கார்டன், AKB ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்மெண்ட், சுமேரு சிட்டி ஆகிய பகுதிகள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 


இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம்(ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி ஆகியவை.
பெரம்பலூர் மாவட்டத்தில் 
வேப்பந்தட்டை பகுதியில் கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவால்மேடு, கவுண்டர் பாளையம், அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில், அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி, அரசடிக்காடு, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர் ஆகிய ஊர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 
சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, ஆலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள்.


மதுரை மாவட்டத்தில் 
பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்கநகர், சாந்தி நகர், அப்பாத்துறை நகர், அஞ்சல் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், கூடல்நகர், சொக்கநாதபுரம், பாத்திமா கல்லூரி மற்றும் அதன் எதிர்புறம், விளாங்குடி மந்தை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகள்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பகுதியில் திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட்பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சாணார்பட்டி மற்றும் ஆகிய பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை மின் தடை செய்யப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.