நாட்டையே உலுக்கிய கொடூர பாலியல் வழக்கு… தீர்ப்பு எப்போது தெரியுமா..? நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!!
SeithiSolai Tamil January 10, 2025 03:48 PM

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பதைபதைக்க வைத்தது. இந்த வழக்கில் சஞ்சயராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் சஞ்சய ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கின் விசாரணை கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளதால் ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்க்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.