ஆயுஷ் மருத்துவ படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..!
Seithipunal Tamil January 11, 2025 01:48 PM

ஆயுஷ் மருத்துவத்தில் காலியாக உள்ள 239 இடங்களுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 'நீட்' தகுதி மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் 20 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 11 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

மாணவர்களின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டில், 167 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில், 41 இடங்கள் அடங்கலாக, மொத்தம், 239 இடங்கள் காலியாக உள்ளன. 

இந்த இடங்களை நிரப்ப, எதிர்வரும் 13ஆம் தேதி வரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான இரண்டு நாள் நேரடி கவுன்சிலிங், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று, ஆயுஷ் மருத்துவ இடங்களில் சேரலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.