ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவிற்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி. சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொகுதியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து வெளியான அறிக்கையில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.