விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!
WEBDUNIA TAMIL January 11, 2025 03:48 PM


விடுதலை சிறுத்தை கட்சி, நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இது குறித்த தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது தளத்தில் கூறியிருப்பதாவது


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதை அடுத்து நாம் தமிழர் கட்சியை தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கடிதம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.