சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும்; நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
Seithipunal Tamil January 11, 2025 01:48 PM

தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத, தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் செல்வகுமார் என்பவர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்பு குழு,தமிழக காவல்துறை தலைவர் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட கோரியுள்ளார்.

அத்துடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத, தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக ஆதி திராவிட நலத்துறையின் செயலர்,தமிழக காவல்துறை தலைவர், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.