பொதுவாக ஒவ்வொருவரும் தங்களின் சோகங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் ,உறவினர்கள் ,மற்றும் கடவுள் என்று நிர்ணயம் செய்து கொள்வர் .இந்த சோர்வு அவர்களின் உற்ற நண்பர்களிடையே பகிர்ந்து கொண்டால் நீங்குகிறது .இந்த மன சோர்வை எப்படி போக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. எந்த சூழல் நமக்கு சோர்வை தருகிறது என்று பார்த்து அதிலிருந்து விலகி விடுதல் இதற்கு நிரந்தர தீர்வு என்று மன நல ஆலோசகர்கள் கூறுகின்றனர் .
2.இப்படி சோர்வு தொடர்ந்து நீடித்தால் நல்ல மன நல வல்லுனரை சந்தித்து ஆலோசனை கேட்கலாம் .அல்லது பின்வரும் சில ஆயுர்வேத மருந்துகளை எடுத்து கொள்ளலாம்
3.மனச் சோர்வை போக்குவதில் மூன்று ஆயுர்வேத மருந்துகள் சிறந்த பலனைத் தரும். இது நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். இதில் அஸ்வகந்தா, சங்கபுஷ்பம் மற்றும் பிராமி ஆகிய மூன்றும் அடங்கும்.
4.அஸ்வகந்தா ஒரு தெய்வீக மருந்து. இது உங்கள் மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிபடுத்ததி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
5.இந்த மருந்தை நோயின் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அன்றாடம் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் புத்துணர்வோடு இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
6.உங்கள்சோர்வை போக்கி நினைவாற்றலை அதிகரிக்க பிராமி என்ற மூலிகை உதவும் . மேலும் இது மன சோர்வை போக்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.