சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்தனர். இந்த கூட்டத்தொடருக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 4 வருட திமுக ஆட்சியில் 80 சதவீத வாக்குகளை கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது மத்திய அரசுக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றிவிட்டது.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்த நிலையில் ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு எல்லாம் ஸ்டாலின் பெயர் தான் இருக்கிறது. இதனை அவரே ஒப்புக்கொண்டார். திமுக ஆட்சியில் பேருந்தில் பெண்கள் குடைபிடித்து செல்லும் நிலை இருக்கும் நிலையில் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்று கூறிவிட்டு தற்போது பேருந்துக்கு முன்னும் பின்னும் லிப்ஸ்டிக் அடித்து விட்டு அந்த பேருந்தில் மட்டும்தான் பெண்களுக்கு இலவச பயணம் என்கிறார்கள். அரசின் வருவாயை அதிகரித்து மகளிர் உரிமைத்தொகை கொடுக்காமல் கடன் பெற்று ஆயிரம் ரூபாய் மாதம் கொடுக்கிறார்கள். இந்தியாவில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் நிலையில் இதுதான் திமுகவின் சாதனையாக இருக்கிறது என்று கூறினார். மேலும் திமுக அரசால் தமிழக மக்களின் மீது கடன் சுமை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.