முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் அவர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகை அனைத்து தெளிவையும் வழங்கட்டும் என புதுவை முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் அறிவுரை வழங்கி உள்ளார்.
புதுவை முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் அவர்களை சமீபத்தில் முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜான் குமார் அறிவுரை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலியார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ. என் னைப் பற்றி வசைமாறி பொழிந்துள்ளார். மக்கள் நீதி மய்ய கட்சி கொடி ஏற்றி, என்.ஆர். காங்., மற்றும் தி.மு.க.,விற்கு போகலாமா அல்லது சுயேச்சையாக நிற்கலாமா என யோசனை குளத்தில் நீந்தி கொண்டிருந்தவர், என்னை 'கட்சி' மாறி' என்கிறார்.
நான்என்னசெய்தேன் என, தொகுதி மக்களைச் சந்தித்து கேட்டால் அவருக்கு தெரியும். அரிசி,பருப்பு கொடுத்து அரசியல் செய்வதாக ஒரு கொச்சை வாதத்தை முன் வைத்திருக்கிறார். அணையாத அடுப்பை ஏற்றி வைத்து வள்ளலார் உணவு வழங்கினார்.உணவு கிடைக் காத பிள்ளைகள் எப்படி படிக்க வருவார்கள்' என்று நினைத்த முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். இவர்கள் அனை வரும், அரிசி, பருப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களைப் பின்பற்றி நானும் கொடுத்தேன்.
பா.ஜ.,வின் தீர்க்கதரிசி வாஜ்பாய் அரசுக்கு,அப்போது தி.மு.க., சித்தாந்த வேறுபாடுகளுடன்தான் ஆதரவு அளித்தது. கருணாநிதி - வாஜ்பாய் கூட்டணி, புதுச்சேரியிலும் வெற்றியை தந்தது.நான் முதலியார்பேட்டை தொகுதியில் நிற்க போவதாக சொல்கிறார். அது நடந்தால் நல்லது தான்.பயம் வந்தால் மனசு குழம்பும். அறிவு தெளிவு இழக்கும். அவருக்கும் அதுதான் நடந்திருக்கின்றது. வரும் பொங்கல் திருநாள் அவருக்கு அனைத்து தெளிவையும் வழங்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்...