தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக ஜனவரி 18ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தஞ்சை ஆட்சியர் பிரியங்கா வெளியிட்டுள்ளார்.