பட்டைய கிளப்பும் மதகஜராஜா..! ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Newstm Tamil January 12, 2025 07:48 PM

மதகஜராஜா என்கிற எம்.ஜி.ஆர். என்கிற ராஜாவை(விஷால்) சுற்றியே கதை நகர்கிறது. கேபிள் நெட்வொர்க் வைத்திருக்கும் ராஜா தன் சிறுவயது நண்பர்களான சந்தானம், சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகியோரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கிறார். தன் நண்பர்களில் சடகோபம் ரமேஷ் மற்றும் நிதின் சத்யாவுக்கு அதிகாரம் படைத்த மீடியா அதிபரான சோனு சூதால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்கிறார் விஷால். சோனு சூதை எதிர்த்து தன் நண்பர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடிவு செய்கிறார்.

முதல் பாதியில் ஒரு சாதாரண ஆள் மற்றும் கிங்மேக்கருக்கு இடையேயான பிரச்சனையை காட்டியிருக்கிறார்கள். தூள் படம் மாதிரி ஒரு பிரச்சனை. ஆனால் தூள் மாதிரி சீரியஸாக இல்லாமல் இதில் காமெடியாக இருக்கிறது. ஆனால் தூள் ஃபீலிங் வருகிறது. பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு பகுதி. பாவாடை, தாவணியில் ஹீரோயின். அடல்ட் காமெடிக்காக கிளாமராக ஒரு நடிகை. ஆட வைக்கும் விஜய் ஆண்டனியின் பாடல்கள். ஃபுல் ஃபார்மில் இருக்கும் காமெடியன். ஆனால் சுந்தர் சி. எல்லாத்தையும் ஜாலியாக கையாண்டிருக்கிறார்.

இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்கள் பற்றி பார்ப்போம்.

படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” முதல் பாதி ஜாலியாக இருந்ததாகவும், மீண்டும் பெரிய திரையில் ஏக்கம் நிறைந்த பொழுதுபோக்கு, சுந்தர் சியின் பிரைம் கேடிவி-க்கு ஏற்ற படங்களை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது. சந்தானத்தின் காமிக் டிராக் காமெடி ஒரு பெரிய சிறப்பம்சமாகும், படம் நிச்சயமாக பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் ” ஒரு தரமான மசாலா என்டர்டெய்னர், இதில் நகைச்சுவை அதிகம் வேலை செய்கிறது. விஷால் நடிப்பு அற்புதம், சந்தானம் காமெடி ஈர்க்கிறது. ஒரு சரியான பொங்கல் எண்டர்டெய்னரை வழங்கியுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. லேட்டாத வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்துருக்கு”என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் “கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படம் + பொங்கல் விழா – பொங்கல் பிளாக்பஸ்டர் ஆக போகிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.


 


 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.