இதை தெரிஞ்சிக்கோங்க..! நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?
Newstm Tamil January 14, 2025 11:48 AM

டைப்1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவு நோய் இரண்டுமே சரியாக நிர்வகிக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரக நோய், இதய நோய் முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவுகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இனிப்புகள், அதிக சர்க்கரை சேர்த்த பிற உணவு பொருள்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதற்கேற்ப ஆரோக்கியமான உணவே என்றாலும் கூட உணவை அதிகமாக சாப்பிடாமல் அளவாக சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட பரிந்துரைப்பார்கள்.

சர்க்கரை பொங்கல் செய்யும் போது பலரும் வெள்ளை சக்கரையை தவிர்த்துவிட்டு, நாட்டு சக்கரையை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியத்தில் குறைவான தீங்கு விளைவிக்கும் என்று நம்புகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரைப் பொங்கல் சமைக்கும் போது, நாட்டு சக்கரை பயன்படுத்தப்படுகிறது. இது நீரழிவு நோயாளிகளுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டு சர்க்கரையில் செய்யப்படும் பொங்கல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நினைக்கின்றனர். இவற்றில் வெள்ளைச் சர்க்கரையை போல அதிக கிளைசெமிக் இல்லை என்றாலும், இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதற்கு பங்களிக்கும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித சக்கரையும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை பொங்கலை முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு கலந்த வெள்ளைப் பொங்கலைச் சாப்பிடுவது நல்லது.

ஒருவருக்கும் சக்கரை பொங்கல் சாப்பிட வேண்டும் என்றால், பெரிய பாதிப்புகளை தவிர்க்க, பொங்கலின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே உட்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.