கீர்த்தி சுரேஷின் தல பொங்கலில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்.!
Seithipunal Tamil January 15, 2025 02:48 AM

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை இன்று உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல், பல திரைப்பிரபலங்கள் அவர்களுடன் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் திருமணமான பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது தல பொங்கலை ஜெகதீஷ் பழனிசாமி அவர்களின் தயாரிப்பு நிறுவனமான தி ரூட் நிறுவனம் கொண்டாடினார்கள்.

இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில், கல்யாணி பிரியன், கதிர், மமிதா பைஜூ, சஞ்சனா என பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.