இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.
எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான பார்களைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
!