அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு ரஷ்யா உள்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 நாடுகளுக்கு பயணம் செய்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா வெளியிட்ட பட்டியலில் ரஷ்யா, வடகொரியா, ஈரான், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, ஈராக்,பெலாரஸ், லெபனான், லிபியா, சூடான், வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதும், சிரியாவில் உள்நாட்டு போர் தொடர்ந்து நிலவி வருவதையும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இதில் மேலும், சோமாலியா போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்கள் அச்சுறுத்தல் உள்ளதாகவும், வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன என்றும், வடகொரியாவில் வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு, அமெரிக்க மக்கள் இந்த 20 நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by siva