பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது என்று சீமானுக்கு ஆதரவாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.இதில் கலந்துகொண்டுபேசியஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாவது:ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று கூறினார்.மேலும் சீமானுக்கும் எனக்கும் கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது என்றும் ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள் என்றும் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்.
மேலும் பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது என்றும் அதை பத்திரிகை துறையில் உடைத்தவர் சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் இது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும் கூறினார்.
மேலும் விழாவில் தொடர்ந்து பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி , இன்றைய அரசியல் சூழ்நிலையில், பாஜக கொண்டு வருகிறது என்பதற்காகவே அதற்கு எதிர்ப்பு தேவைப்படுகிறது என்றும் இந்த நாட்டில் 1967ம் ஆண்டு வரை ஒரே தேர்தல் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தனியாக தேர்தல் நடத்தக்கூடாது என்று அதற்கு செலவாகும். எனவே, ஒட்டுமொத்த தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியதே கருணாநிதி தான் என குறிப்பிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி அதெல்லாம் மக்களுக்கு மறந்துவிட்டது என்றும் ஒரு புதிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் எதிர்க்கிறார்கள் என்றும் இது சாத்தியமா? இல்லையா? என்பதை இப்போதைக்கு கூற முடியாது" இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.