தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (ஐடி) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐடி இன்ப்ராக்ஷ்டர் எக்ஸ்கியூட்டிவ், ஐடி தொழில்நுட்ப நிர்வாகி, சாப்ட் டெவலப்பர், சிஸ்டம்/ சர்வர் எக்ஸ்கியூட்டிவ், சிபிஎஸ் சப்போர் என்ஜினியர், டேடா சயிண்டிஸ்ட், தரவு ஆய்வாளர், வணிக அனலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி:
பணியின் தன்மைகேற்ப கல்வி தகுதி கோரப்பட்டுள்ளது. ஐடி இன்ப்ராஸ்ட்ரக்ஷர் பணிக்கு பி இ/ பிடெக்,/ எம்.சி.ஏ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். சர்வர் மெயிண்டனிங்க், டேடாபேஸ் உள்ளிட்டவற்றில் 12 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் அவசியம். பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் , அக்கவுண்டிங், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஃபைனான்ஸ், எகனாமிக்ஸ் அல்லது அது தொடர்பான பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். டேடா அனலிஸ்ட் பணிக்கு முதுகலை பட்டம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எச்.டி முடித்து இருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிபட்சம் 40 வயது வரை சில பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க இன்று ஜனவரி 15.01.2025 கடைசி நாளாகும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ITSPCL20242502.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
!