இன்று முன்பதிவு துவக்கம்... சென்னைக்கு திரும்ப நெல்லை, தூத்துக்குடி, மதுரையிலிருந்து சிறப்பு ரயில்கள்!
Dinamaalai January 15, 2025 11:48 AM

பொங்கல் தொடர் விடுமுறையை சொந்த பந்தங்களோடு சேர்ந்து சிறப்பாக கொண்டாட சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், விடுமுறை முடிந்து இவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லை, மதுரை மற்றும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை துவங்குகிறது. தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் ஜனவரி 19 (ஞாயிற்றுகிழமை) மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் – 06168) புறப்படும் எனவும் இதற்கான  முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதே போல மதுரையில் இருந்தும் சென்னைக்கு MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரயில் (வண்டி எண் 06062) ஜனவரி 19ம் தேதி ஞாயிறன்று மாலை 4 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. இது முன்பதிவில்லா ரயிலாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

!

 .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.